வாழைச்சேனையில் மாற்றுத்திறனாளிகளால் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 31ம் நாள் நினைவு

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ச.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், திருமதி.அ.சந்திரகுமாரன், வாழைச்சேனை கிராம சேவை அதிகாரி எஸ்.சுபோஷ், புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி சி.வரதராஜன், கிழக்கு பல்கலைக் கழக பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனையும்;, ஈகைச் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான க.ஜெகதீஸ்வரன், புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி சி.வரதராஜன் ஆகியோர் இரங்கல் உரையினை நிகழ்த்தினார்கள்.