கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய இடமாற்றங்கள் அனைத்தும் ரத்து! ஆளுநர் அலுவலகத்திலிருந்து கல்விச்செயலருக்கு உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாவும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.


கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து (21) பகல் இந்த உத்தரவு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கே.ஜி.முத்துபண்டாவிற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றங்களால் தமிழ்ப்பாடசாலைகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாக மட்டு. மாட்வட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆளுநரைக்குற்றம் சுமத்தியதோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.


அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதிடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந் இடமாற்றவிவகாரத்தை சுட்டிக்காட்டியதையடுத்து ஜனாதிபதி உடனடியாக ரத்துச்செய்ததாக ஊடகங்களில் செய்திவந்திருந்தன.


ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ரத்து இடம்பெற்றிருப்பதனால் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக தமிழ்ப்பாடசாலைகளுக்கு திரும்பவேண்டியவராகவுள்ளனர்.

தற்போது நாடு இயல்புநிலையும்படிப்படியாக மீளத்திரும்பி;க்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.