முனைக்காடு கிராமத்தில் எட்டு மாடுகள் மடக்கி பிடிப்பு

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட என்ற சந்தேகத்தில் எட்டு மாடுகள் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று(20) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

முனைக்காடு கிராமத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, ஐந்து எருமை மாடுகளும் மூன்று பசு மாடுகளும் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.