ரிசாட்டுக்கு எதிரான பிரேரணையில் மகிந்த கையெழுத்திடவேண்டும்.

ரிசார்ட் பதுர்தீன் ஒரு அரசாங்க அமைச்சர். அவர் பற்றிய முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். அமைச்சரவை எடுக்க வேண்டும். இதை நாம் அரசுக்கு உள்ளே வலியுறுத்துகிறோம். அதுதான் முறைமை..இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அதை எதிர்கட்சிகள் எடுக்க முடியாது. அவர்களுக்கு ரிசார்ட் பதுர்தீனை வீழ்த்துவதை விட அரசாங்கத்தை வீழ்த்துவதே முதல் அவசியமாக இருக்கிறது. எதிர்கட்சிகளின் இந்த பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கையெழுத்து இடவில்லை. அது ஏன் என யோசிக்க வேண்டும். அவர் இதில் அரசியல் செய்ய விளைகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அவரும் கையெழுத்து இட வேண்டும். மேலும் பிரேரணை ஆவணத்தில் திகதியை பிழையாக 2018 என போட்டுளார்கள்.

இவர்கள் இதை சீரியசாக எடுத்துள்ளார்களா என தெரியவில்லை.

இன்று இலங்கை அரசியல் என்பது பெரும்பான்மை கட்சிகளின் சிறுபிள்ளை விளையாட்டு ஆகும். எதிர்வரும் புதன்கிழமை சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டு, அதை சபையில் சமர்பிப்பதா இல்லையா என முடிவு எடுக்கப்படும். எனவே பொறுமையாக உணர்ச்சிவசப்படாமல் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.