மட்டு.ஆரையம்பதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்முனைப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து, கிறிஸ்தவ முறையில் அஞ்சலி நிகழ்வுகள் இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

காலை 08.30 மணிக்கு ஆரையம்பதி புனித திரேசம்மாள் தேவாலயத்தில் விசேட அஞ்சலித் திருப்பலியுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள், பூசைகள் இடம்பெற்றன.