முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு  அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர் ,சிறுமி ஒருவர் பொது சுடர் ஏற்றினார்.

அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.