மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் புதிய நீர்ப்பாசன அபிவிருத்தித்திட்டம்.

(சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மேலதிகமாக 1 ௦ ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கை பண்ண  நெதர்லாந்து உதவியில் 1 3 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் புதிய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்ட மொன்றினை  அமுல்படுத்த விவசாய,கால்நடை,கிராமிய பொருளா தாரநடவடிக்கை ,கால்நடை அபிவிருத்தி, ,நீர்ப்பாசன ,மற்றும் மீன்பிடிநீரியவள அபிவிருத்தி அமைச்சு  நடவடிக்கை  எடுத்துள்ளது

இம்மாவட்டத்தில் நிலவும் வெள்ளஅனர்த்தம்,மற்றும் வறட்சி யினால் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையினை சீர் செய்யவும் ,விவசாய மாவட் டமாக இருப்பதால் உணவு உற்பத்தியினை அதிகரித்து இம்மாவட்டத்தில் வறுமை யினை தணிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகு மென மாவட்ட அரசாங்க அதிபர் .மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

உறுகாமம்,கித்துள் ஆகிய நீர்ப்பாசன ஆறுகளை இணைத் சுமார் இரண்டு மீட்டருக்கு உயர்த்துவது இத்திட்டத்தின் செயல்பாடாகும், இதனை அமுல் படுத்துகையில் பாதிக்கும் கோப்பாவெளி பகுதியில் 3 3 குடியிருப் புக்கள்,7 5 ௦ ஏக்கர் நெல்வயல்கள்,ஆரம்பபாடசாலை க்கும் ,மீன்சந்தைகட்டிட தொகுதிக்கும், கால்நடை அபிவிருத்திக் கும்,சேனைப்பயிர் செய்கைக்கும்  நஷ்டஈடுமற்றும் காணிகளை இழப்போ ருக்கு மாற்றுக்காணி களையும், வழங்கவும் ஏற்பாடுகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இப்புதிய நீர்ப்பாசனதிட்டத்தில் ஏற்கனவே இப்பிரதேசத்தில்  விவ சாயம் செய்கை பண்ணப்படும் 1 ௦ ஆயிரம் ஏக்கருக்கு மேலதிகமாக 1 3 ஆயிரம் ஏக்கர் விவசாய செய்கைக்கு வழிசெய்யப்பட்டுள்ளதுடன்  சுமார் ஐந்து வருட காலத்தில் இத்திட்டம் நிறைவு செய் யப்படவுள்ளதுடன் ஆரம்ப நடவடிக்கைகள் யாவும் தற்போது பூர்த்தி செய் யப்பட்டுள்ளதாக இன்று (1 7 )மட்டக்களப்பு மாவட்ட செய லகத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின்இணைப்புக் குழுகூட் டத்தில்தெரிவிக்கப்பட்டது.

இந்த நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தில் உன்னிச்சை ,கிரான் பகுதி களுக்கு குடிநீர்வளங்கவும்,மேட்டுநில பயிர்களான கச்சான் ,சோளம்,இறுங்குபயிர்களை மேலதிகமாக உற்பத்தி செய்யவும், தற்போது செயலிழந்துள்ள தூர்ந்து போனசிறிய குளங்களை அபி விருத்தி செய்யவும் வாய்ப்புகிட்டுவதாக இன்றைய இணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் .மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தலைவர் எஸ்.நாகமணி இந்த திட்டத்தின் பணிப்பாளர் எந்திரி, சிவபாதசுந்தரம் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி நவரூப முகுந்தன் ,மற்றும் நீர்ப்பாசனம், விவசாயம், வீதி அபிவிருத்தி அதிகார சபை,வனஇலாகா,விலைமதிப்பீடு, மீன்பிடி ,திணைக்களங்களின் உயரதிகாரிகள்பலரும் பிரசன்னமாகியிருந் தனர் ,