சிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.

சிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்…அதற்காக எனது பங்குக்கு எனது சொந்தப் பணம் 50000/- ரூபாவினை வழங்குகிறேன்…”

என்று…

சிங்கள தீவிரவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை மீள்நிர்மாணிக்கும் நிதியம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான அறைகூவலை குறித்த Dhanushka De Silva என்னும் சிங்கள சகோதரர் தனது ட்விட்டர் பதிவில் விடுத்திருந்தார்.

உண்மையிலேயே மிகவும் வரவேறகத்தக்க விடயம் இது.

இதிலிருந்து சிங்கள மக்கள் மொத்தமும் இனவாதிகளல்ல என்பது புரிகிறது.

கடந்த வன்முறைச் சம்பவங்களின் போது மினுவாங்கொட, கொட்டாரமுல்ல, போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்கள் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து உயிர்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் பலவும் நடந்திருக்கின்றன.

மதங்களைக் கடந்தது மனித நேயம்…

Izzath Musthafa Eravur