ஒற்றுமையாக இலக்கை  நோக்கி பயனிப்பதே இந்த பத்தாண்டு முள்ளிவாய்க்கால் நினைவில் நாம் உறுதி எடுக்கும் விடயம்

பா.அரியநேத்திரன்,மு.பா.

ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த நாள்தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும் அது மே 18,ம் திகதி என்பதே உலகத்தமிழர்கள் அனைவரும் மனதார நினைவு வணக்கம் செலுத்தும் நாளாகும் எனமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில் 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு எதிர்வரும் 2019,மே,18ம் நாள்  பத்தாவது ஆண்டு நினைவாகும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே நாளான 2009,மே,18ம் திகதிதான் ஆயுதவிடுதலைப்போராட்டம்மௌனித்த நாளாகும்.

கடந்த ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு மே,18ம் திகதியும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் ஏதோ ஒருவிதமாக பல இடங்களிலும் நினைவு கூரப்பட்டு வருகிறது கடந்த 2016,ம் ஆண்டு தொடக்கம்முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்று திரண்டு பெரும் எழுச்சியாக வணக்க நிகழ்வை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதை காண  முடிகிறது.

ஆனால் முதலாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வடக்கு கிழக்கு மகாணத்தில் மட்டக்களப்பை தவிர வேறு எந்த இடத்திலும் அச்சம் காரணமாக நடத்தப்படவில்லை நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடாகமுதலாம் ஆண்டு நிகழ்வை 2009,மே,18,ல் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தில் விசே பூசை வழிபாடு திருவாசகம் முற்றோதி விளக்கேற்றி நினைவு உரைகளையும் நடத்தியபின் மறுநாள் 2009, 05,19, மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பெரிய பூசை ஒன்றை  இறந்த அத்தனை உறவுகளுக்குமாக பிண்டங்கள் செய்து அமிர்தகழி தீர்தக்குளத்தில் அவைகளை கரைத்து வேள்விப்பூசைகளை செய்தோம்.

அன்றில் இருந்து ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்தை தவறாது ஒவ்வொரு மேமாதம் 18,ம் திகதியும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தி அன்னதானம் இறந்த உறவுகள் ஞாபகார்த்தமாக வழங்கிநினைவு உரைகளை நடத்திவருகின்றோம்.

அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுகளை நாம் நடத்தவில்லை  அதற்காக அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யக்கூடாது என சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை.

விடுதலைப்போராட்டம் அகிம்சைரீதியாக மூன்று சகாப்தமும் ஆயுதரீதியா மூன்று சகாப்தமும் எமது மண்ணில் இடம்பெற்றது.

 அது அரசியல் ரீதியான போராட்டங்களே அன்றி அரசியல் அல்லாத தனிக்குழ போராட்டங்கள் இல்லை இந்த அரசியல் ரீதியான விடுதலைப்போராட்டங்கள் காரணமாகவே உண்மையை புரிந்து அதற்கான தீர்வை தரமறுத்த இலங்கை அரச தலைவர்கள் இன வன்முறையாக மாற்றி இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உண்மை

                                                                               எமது போராட்டம் தியாகம் இழப்பு சாதனை சரித்திரம் அவலம் துயரம் எல்லாமே அரசியல் சார்ந்தவைகள்தான் அந்த இனப்படுகொலைக்கான தீர்வு நீதி வேண்டி சர்வதேசம்ஊடாக நாம் முன்எடுக்கும் அத்தனை செயல்பாடுகளும் அரசியல் சார்ந்த செயல்பாடே  அன்றே தனிலாபம் பெறும் செயல்பாடுகள் இல்லை.

எனவே இலங்கையில் நடந்த அத்தனை படுகொலைகள் இறுதியுத்தம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகளை அரசியல் வாதிகள் கலந்து கொள்வது அரசியல் கட்சிகள் செய்வதில் என்ன தப்பு உள்ளது.

தற்போது கடந்த 2017,ம் ஆண்டு தொடக்கம் சிலர் மே12,ம் திகதி தொடக்கம் மே 18,ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் என தாங்களாகவே கூறி விரும்பிய இடங்கள் மாவட்டங்கள் என விளக்கேற்றி வணக்கம்செலுத்துவதை காணமுடிகிறது.

உண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என்பது மே18,ம் திகதியே மிகப்பொருத்தமான நாளாகும் 2009,மே,18,ம் திகதிதான் விடுதலைப்போராட்டமான ஆயுப்போராட்டம் மௌனித்த நாளாகும் ஏனய மே12ம் திகதிதொடக்கம் மே18,ம் திகதி வரை முள்ளிவாய்க்கால் போர் மௌனிக்கவில்லை உக்கிரமான சண்டை இடம்பெற்ற நாட்களாகும் சண்டை இடம்பெற்று கொண்ட நாட்களெல்லாம் முள்ளிவாய்கால் நினைவு தினம்அனுஷ்டிப்பதாயின் 2008,ம் ஆண்டு தொடக்கம் அனுஷ்டிக்கவேண்டும் எல்லா மாதமும் எமது உறவுகள் நாள்தோறும் சாவை  தளுவினர் என்பது உண்மை.

மே 18,ம் நாள் என்பது உலகவரலாற்றில் எந்த தமிழரும் மறக்கமுடியாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் என்பதை கருத்தில்கொண்டு அந்த நாளை எமது  உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவதேஅந்த நாளுக்கு பெறுமதியாகும்.

பத்துவருடங்கள் இன்று கடந்த போதும் எமது உண்மைக்காக உரிமைக்காக எந்த ஒரு தீர்வும் இன்றியே இந்த பத்தாவது ஆண்டில் எமது உயிர்நீத்த மக்களை நினைவு  கூருகின்றோம்.

சர்வதேச ரீதியில் கடந்த பத்தாண்டுகளில் இனப்படுகொலைக்கான நீதி கேட்டு .நாசபை ஊடாக பல விடயங்களை தமிழ்தேசியகூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் உறவுகள் அமைப்புக்கள் முன்எடுத்தாலும் அதற்கானநீதி இந்த பத்துவருடங்களும்  கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அதற்காக நாம் சோர்ந்து போகாமல் எமக்கான உரிமை எமதுமக்களுக்கான இனப்படுகொலைக்கான நீதி எமது வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையாக இலக்கை நோக்கி பயனிப்பதேஇந்த பத்தாண்டு முள்ளிவாய்க்கால் நினைவில் நாம் உறுதி எடுக்கும் விடயம் எனவும் மேலும் கூறினார்.