காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து கொழும்பு சென்ற பேருந்­தி­லி­ருந்து மீட்கப்பட்ட மர்மப் பொதி

உரி­மை­யாளர் இல்­லாமல் பாசல் ஒன்றில் 2 ஜி.பி.எஸ். கொண்­டு­ சென்ற பேருந்து நடத்­துநர் மற்றும் அதனை அனுப்­பிய வர்த்­தகர் ஒருவர் உட்­பட இருவர் கைது செய்­யப்­பட்­ட­துடன் 7 ஜி.பி.எஸ்.கள் மீட்­கப்­பட் ­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸார் தெரி­வித்­தனர்.

காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்­புக்கு நேற்றுப் புதன்­கி­ழமை சென்ற தனியார் பேருந்தில் இருந்தே இவை மீட்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த பேருந்தை கல்­லடிப் பாலத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள சோதனைச் சாவ­டியில் காலை 9 மணி­ய­ளவில் விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் சோதனை­யிட்­டனர். இதன்­போது பேருந்தின் முன்­ப­கு­தியில் பொதி­ செய்­யப்­பட்ட பார்சல் ஒன்றைக் கண்டு அது­ யா­ரு­டை­யது என வின­வினர். அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், பேருந்து நடத்­துநர் காத்­தான்­கு­டியிலிருந்து வர்­த்தகர் ஒருவர் கொழும்பில் குறித்த விலா­சத்திலிருந்து வந்து பொறுப்­பேற்பார் என தம்­மிடம் வழங்­கி­ய­தாக தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் அந்தப் பார்­சலை உடைத்து சோதனை செய்­த­போது அதில் இருந்து இரு ஜி.பி.எஸ். இருப்­பதை கண்டு, நடத்­து­நரைக் கைது செய்­த­துடன் பார்­சலை வழங்­கிய காத்­தான்­குடி வர்த்­தக நிலை­யத்­துக்குச் சென்று சோத­னை­யிட்­டதில் அங்­கி­ருந்து 5 ஜி.பி.எஸ்.கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து வர்த்தகரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.