எமது சமூகத்தை இழிவுபடுத்த வேண்டாம்”: ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ள எம்.எஸ்.எஸ்.அமீர் அலி..!

இலங்­கை­யி­லுள்ள ஊட­கங்கள் தர்­மத்­தோடு செயற்­பட வேண்­டுமே தவிர தய­வு­செய்து சிறு­பான்மை சமூ­கத்தை இழி­வு­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களை செய்ய வேண்டாம் என்று விவா­சாய, நீர்ப்­பா­சன மற்றும் கிரா­மிய பொரு­ளா­தார இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்­டுள்ளார். ஓட்­ட­மா­வடி மீரா­வோடை மஸ்­ஜிதுர் ரிழா பள்­ளி­வாயல் புன­ர­மைப்பு செய்­யப்­பட்டு தொழுகை நட­வ­டிக்­கைக்­காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மேலும், தமிழ் மற்றும் சிங்­கள ஊட­கங்­களோ அல்­லது வேறு எந்­த­வொரு ஊட­க­மாக இருந்­தாலும் சரி தர்­மத்­தோடு பேச தவ­று­மாக இருந்தால் நிச்­ச­ய­மாக ஒரு சமூகம் முற்­று­மு­ழு­தாக வெறுத்து ஒதுக்­கு­கின்ற ஊட­க­மாக அது மாற்­றப்­பட்டு விடும். அவ்­வாறு இல்­லை­யாயின் ஊடக தர்­ம­மாக இல்­லாமல் அது வேறொரு கசாப்புக் கடை­யாக இருக்கும்.

ஒரு கத்­தியைக் கண்­டு­பி­டித்தால் அல்­லது பள்­ளி­வா­யலில் கத்­திகள் எடுத்தால் அதனை பெரி­து­ப­டுத்தி பூதா­க­ர­மாக்­கு­கின்­றனர். இந்­நாட்டில் சமை­ய­ல­றையில் பாண் வெட்டும் கத்­தியை கூட பயத்தில் பொலி­ஸா­ரிடம், வீதியில், ஆற்றில் வீசு­கின்ற துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டது ஊட­கங்கள் இதனை பெரி­து­ப­டுத்தி அச்­ச­மூட்­டிய கார­ணத்­தி­னால்தான்.

ஊட­கங்கள் தர்­மத்­தோடு செயற்­பட வேண்டும். தய­வு­செய்து சமூ­கத்­தினை இழி­வு­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்­கின்றேன். ஒரு சிறு­பான்மை சமூ­கத்­தினை இழி­வு­ப­டுத்­து­கின்ற, அச்­சு­றுத்­து­கின்ற, பயப்­ப­டுத்­து­கின்ற தன்­மையை ஒரு ஊடகம் செய்யக் கூடாது என்­பது எங்­க­ளது வின­ய­மான வேண்­டு­கோ­ளாகும்.

பாரா­ளு­மன்­றத்தில் மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் புதல்­வர்கள் எங்­க­ளி­டத்தில் கேட்­கின்­றார்கள் உங்­க­ளுக்கு இந்­நாட்டில் வாழ முடி­யாது என்று சொன்னால் வேறு எங்­கா­வது சென்று விடுங்கள் என்று கூறு­கின்­றனர். நாங்கள் எங்கு செல்­வது. இதற்கு என்ன பதிலை வழங்க முடியும்.

முஸ்லிம் சமூ­கத்தில் இருந்து விரல் விட்டு எண்­ணு­ம­ள­வி­லுள்ள ஒரு சிலர் செய்த இந்த செய­லுக்­காக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழியை சுமத்­தாமல் சங்­க­டத்­திற்குள் உள்­ளாக்­கா­தீர்கள் என்ற செய்­தியை பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் நாங்கள் சொல்ல வேண்டும் என்றார்.

மீரா­வோடை மஸ்­ஜிதுர் ரிழா பள்­ளி­வாயல் தலைவர் எம்.எல்.எம்.சபுர் தலை­மையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வட்டாரக்குழு உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.