தென்னமரவாடியில் அத்துமீறல்

நாட்டில் நிலவும் இனரீதியான குளப்பங்களுக்கு நடுவில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடியில் உள்ள புராதன சுவாமி மாலைப்பகுதியில் (தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன்) சட்டவிரோத கட்டிடங்களை பௌத்த அமைப்புக்கள் முன்னெடுப்பதாக குச்சவெளி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் புராதன ஆலயங்கள் இருந்ததாக சொல்லப்படும் இப்பகுதியில் அண்மைக்காலமாக அத்துமிறல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிரதேச செயலகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நிலவும் கலவர நிலமையில் மக்களின் கவனங்கள் திசைதிருப்பட்டுள்ள நிலையிலும் ஊரடங்கு சட்டங்கள் அமுலில் உள்ளதை சாதகமாக பயன்படுத்தியும் குறித்த கட்டிடங்கள் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளதாக குச்சவெளி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இனங்களுக்கிடையில் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தி நாட்டின் நிலமையை மேலும் சிக்கலாக்கும் என கிராம தமிழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரச அதிகாரிகள் முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இனரீதியான பாராபட்சம் காட்டுவது இந்நிலமைகளைமேலும் சிக்கலாக்குகிறது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடுகின்றனர்.

இதுபற்றி திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளு அதிகாரிகளின் கவனத்திற்கும் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை பல மாதங்களுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மரவாடிப்பிரதேசம் கடந்த 1985ம்ஆண்டுகளில் கலவரத்தினால் இடம்பெயர்ந்து பின்னர் 2010 அளவில் மீள குடியமரத்தப்பட்டமையும் கவனிக்கத்தக்கது.