கரடியநாறு பாடசாலையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

0
507

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியநாறு பாடசாலையில் இன்று(15) புதன்கிழமை தொழில் வழிகாட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது.
கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, சித்தியடையாத அனைத்து மாணவர்களையும் இணைத்து இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

ஏறாவூர்பற்று கல்விக் கோட்ட மாணவர்களுக்காக இச்செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மாணவர்களிடம் காணப்பட்ட திறமைகள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு பொருத்தமான பாடத்துறைகள், தொழில்துறைகள் தொடர்பில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கமளிக்கப்பட்டன.
இச்செயலமர்வினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில்வழிகாட்டல் பிரிவு ஒழுங்கு செய்து நடாத்தியிருந்தமையுடன், இதற்கான அனுசரணையினை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி தீர்வு நிறுவனம் வழங்கியிருந்தது.

செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் கலந்துகொண்டிருந்தமையுடன், வளவாளர்களாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.