நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன !

Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன (Transnational Government of Tamil Eelam-TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்தில் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ((Transnational Government of Tamil Eelam – TGTE) மூன்றாம் தவணை அரசவைத் தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பெரும்பாலான நாடுகளில் கிடைத்த வேட்பாளர் மனுக்களின் அடிப்படையில் அந்நாடுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப் பட்டுள்ளுனர் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐக்கிய இராச்சியத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்த தேர்தல் நிறைவேற்றப் பட்டதோடு, தபால் மூலமும் நேரடி வாக்களிப்பின் மூலமும் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப் பட்டு அங்கு தெரிவான உறுப்பினரின் பெயர்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன என்ற செய்தியையும் இவ்விடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

போட்டியில்லாமலும் போட்டியின் அடிப்படையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்களாக வெளிவந்துள்ள உறுப்பினரின் பெயர்களை இவ்விடத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் வருமாறு:

அமெரிக்கா

1. திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன்
2. திரு. தவேந்திர ராஜா
3. திரு. ராஜலிங்கம் விக்டர்
4. திரு. வைத்திலிங்கம் அருள்தாசன்
5. திரு. துரைரத்தினம் சுரேந்திரா
6. திருமதி. தமயந்தி லோகேஸ்வரன்
7. திரு. பரமசிவம் மகேஸ்வரநாதன்
8. திருமதி. சர்வேஸ்வரி தேவராஜா
9. திரு. சுந்தரம் சண்

10.திரு. ஐயாத்துரை ஜெயக்குமார்

ஒஸ்திரேலியா

1. திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகர்
2. திரு. புவனேந்திரன் வசந்தன்
3. திரு. கந்தசாமி குவேந்திரன்
4. திரு. சிவராசா மன்மதராசா
5. திரு. கனகசபாபதி சிறிசுதர்சன்
6. திரு .சுப்பையா ஸ்கந்தகுமார்

கனடா

ஒன்றாரியோ மாகாணத்தின் 15 உறுப்பினர்கள்

1. திரு. மா.கா.ஈழவேந்தன்
2. திரு. ஆறுமுகம் கோபாலகிருஷ்ணன்
3. திரு. விஜிதரன் வரதராஜன்
4. திரு. மகாஜெயம் மகாலிங்கம்
5. திரு. குமணன் குணரட்னம்
6. திருமதி. சாந்தினி சிவராமன்
7. திரு. மரியராசா மரியாம்பிள்ளை
8. திரு. ஜோ அந்தோனி பொன்ராஜா
9. திரு. விநாயகமூர்த்தி நிமால்
10. திரு. சேவியர் எரிக்
11. திரு. பூபாலபிள்ளை சஞ்சீவன்
12. திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தகுமாரன்
13. திரு. இராமகிருஸ்ணா சந்திரகுமார்
14. திரு. றோய் விக்கினராஜா
15. திரு. கதிரமலை சபாநாதன்

ஒன்ராறியோ கிழக்கிற்கான 5 உறுப்பினர்கள்

1. திரு. இராசநாயகம் ரவீந்திரன்
2. திருமதி. வையந்தலக்சுமி வையாபுரி
3. திரு. கிருபைராஜா ஹென்றி
4. திரு. நாகராஜா ரெஜினோல்ட்
5. திருமதி. தர்மபாலினி சின்னத்தம்பி

மேற்கு கனடாவிற்கான 5 உறுப்பினர்கள்

1. திரு. தனிநாயகம் சண்முகநாதன்
2. திரு. தர்மலிங்கம் ரவிதரன்
3. திரு. மகேந்திரன் சுரேன்
4. திரு . தெய்வேந்திரன் தெய்வரூபன்
5. திரு . முருகண்டி நவநேசன்

பிரான்ஸ்

1. திரு. கொலின்ஸ் மைக்கேல்
2. திரு. கார்திகேசு கலையழகன்
3. திரு. ரூபகரன் ரொபின்
4. திரு. சிவகுருநாதன் சுதர்சன்
5. திரு. சிவசுப்ரமணியம் மகிந்தன்

ஜெர்மனி

1. திரு. இராசரத்தினம் ஜெயச்சந்திரன்
2. திரு. சின்னையா ரீமான் லோகநாதன்
3. திருமதி. இந்துமதி கிருபசிங்கம்
4. திரு. குலசேகரம் குலதீபன்
5. திரு. செல்வராஜா சிவனேஸ்வரன்
6. திரு. கனகசபை முகுந்தன்
7. திரு. கந்தையா சுப்ரமணியம்
8. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன்
9. திருமதி. ஞானகௌரி கண்ணன்

நியூசிலாந்து

1. செல்வி. அமுதினி மோகன்ராஜ்
2. கலாநிதி. சிவா வசந்தன்

சுவிற்சர்லாந்து

1. திருமதி. இராஜனிதேவி சின்னத்தம்பி
2. செல்வி. தமோதினி சிசு
3. திரு. சதாசிவம் ஜெகசீலன்
4. திரு. செல்வராஜா ஜெயம்
5. திரு. முருகையா சுகிந்தன்
6. திரு. கந்தையா ஜெகதீஸ்வரன்

ஐக்கிய இராச்சியம்

1. திருமதி. பாலாம்பிகை முருகதாஸ்
2. திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம்
3. திருமதி. குமுதினி மார்க்கண்டு
4. திரு கணேசலிங்கம் குகரூபன்
5. திருமதி. பிரியாந்தி சுதர்சன்
6. திரு. வேலுப்பிள்ளை மகாலிங்கம் மயூரதன்
7. திரு. குருலிங்கம் சந்துரு
8. திரு. துரைசிங்கம் கிருஷாந்த்
9. திரு. ராசேந்திரம் நுஜிதன்
10. திரு. கிருஷன்மூர்த்தி ஐயர் கஜவதனன்
11. திரு. ராஜதுரை பார்த்தீபன்
12. திரு. கந்தையா அஜந்தன்
13. திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ்
14. திரு. தேவராஜா நீதிராஜா
15. திரு. சந்திரகுமார் பிறேம்குமார்
16. திரு. ஞானசேகரம் கலையரசன்
17. திரு. விநாசித்தம்பி பராமலிங்கம் லிங்கஜோதி
18. திரு. வேதநாயகம் சஞ்சீவதனுஷன்
19. திரு. நடராஜா அமரநாத்

தெரிவாகியுள்ள அத்தனை உறுப்பினரையும் பாராட்டுவதோடு அனைவரினதும் ஊக்கமும் ஆக்கமும் மிக்க மேன்மையான செயற்பாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சியப் பயணத்தினை வேகமாக முன்நகர்த்த வாழ்த்துகிறோம்.

தேர்தல் ஆணையத்தின் பணிகளில் உள்ளேயும் வெளியேயும் இருந்து பொறுப்புடன் பணியாற்றி உதவிய அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எமது பாராட்டுகளையும் கடப்பாட்டினையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்கிறோம் என தலைமை தேர்தல் ஆணையாளர் பொன் பாலராஜன் சார்பாக ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் 20வது மக்கள் பிரதிநிதியின் பெயர் விபரம் பின்னர் அறியத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை