கல்முனைவாழ் தமிழ்மக்களுக்கான அந்த நிருவாக அலகு நிச்சயம் வழங்கப்படவேண்டும். மௌலவி அஸ்வர்

நாட்டின் இனநல்லிணக்கத்தை இங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்!
கல்முனை இனஜக்கிய சம்மேளன ஊடகமாநாட்டில் வலியுறுத்து!
(காரைதீவு  சகா)
நாட்டில் இனநல்லிணக்கத்தை இங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும். மாணிக்கமடுவில் விகாரை அமைத்தல் கல்முனை உபபிரதேசசெயலகத்தை தரமுயர்த்தல் கல்முனை நகரில் 4சமயங்களின் இலச்சினைகள் பொறித்த அறிவித்தல்பலகையொன்றை நடுதல் போன்ற நல்லிணக்கச்செயற்பாடுகளினூடாக இனநல்லுறவை வளர்க்க செயற்படுவோம்.

 

கல்முனையில் நேற்று(13) நடைபெற்ற இனஜக்கிய சம்மேளனத்தின் ஊடகமாநாட்டில் உரையாற்றிய சமயத்ததலைவர்கள் வலியுறுத்தினர்.
 
இம்மாநாடு கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் ஒன்றியத்தலைவர் வண.போதகர் எ.கிருபைராஜா தலைமையில் சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சோமரத்ன தேரர் வழிகாட்டலில் நடைபெற்றது.
 
வடக்கு கிழக்கு மாகாண பிரிவேனாக்களின் தலைவரும் அம்பாறை ஸ்ரீ வித்யாலங்கார பிரிவேனாவின் தலைவருமான கலாநிதி வண.கிரிந்திவல சோமரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்துக்குருமாhர் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்தக்குருக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் மௌலவி எம்.அஸ்ஹர் வண.பிதா ருபன் அடிகளார் உள்ளிட்ட 40 சமயத்தலைவர்கள் இவ் ஊடகமாநாட்டில் கலந்துகொண்டனர்.
 
ஆரம்பத்தில் மௌன இறைவணக்கத்துடன் உயிhத்தஞாயிறில் உயிர்நீத்த உறவுகளுக்கு 2நிமிடநேர அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு சமயம் சார்பிலும் தலைவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
 
வண.பிதா. ருபன் அடிகளார் பேசுகையில்: கடந்தகாலத்தில் நடந்தவைகளை மறந்து மன்னித்து எதிர்காலத்தை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப மதத்தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் என்றார்.
 
சிவஸ்ரீ.சச்சிதானந்தகுருக்கள் பேசுகையில்;
யுத்தம் நடந்தகாலங்களில்கூட அவரவர் சமயவிழாக்கள் பண்டிகைகள் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் இன்று அதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். முதலில் மக்கிளடையேயுள்ள அச்சத்தை தப்பிபிராயங்களை நீக்கவேண்டும். கல்முனை உபபிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவதனூடாக இனஜக்கியத்தை மீண்டும் துளிர்விடச்செய்யலாம் என்றார்.
 
வண.கிரிந்தவல சோமரத்ன தேரர் கூறுகையில்:
இந்த நாட்டில் இனமதபேதமற்று சகல இனமக்களும் சமாதானமாக வாழவேண்டும். எந்த இனமாகவிருந்தாலும் பயங்கரவாதி பயங்கரவாதிதான். அப்படிப்பட்டவர்களை அனைவரும் சேர்ந்து விரட்டவேண்டும். அவர்கள்  எம்மை மட்டுமல்ல 40வெளிநாட்டவரையும் கொன்றிருக்கிறார்கள்.ஒவ்வொருவீட்டிலும் வாள் இருந்தால் பக்கத்துவீட்டு சண்டைக்கும் வாளை உபயோகிப்பார்கள்..முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகாளக நாம் பார்க்கவில்லை.
நாட்டில் நடந்த கொடுரத்திற்கு யாரும் வகைகூறவில்லை.மாணிக்கமடுவில் புராதன விகாரையை அமைக்க அனைவரும் ஒத்துழைப்கை வழங்கவேண்டும் என்றார்.
 
எம்.அஸ்ஹர் மௌலவி பேசுகையில்:
புனித குர்ஆன் ஒருபோதும் பயங்கரவாதத்தை விரும்பவில்லை.இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையுமே சொன்னது. முஸ்லிம்களின் பெயரால் நடாத்தப்பட்ட கொடுரத்தை நாம் வன்மையாகக்கண்டிக்கிறோம்.நாட்டிலுள்ள 20லட்சம் முஸ்லிம் மக்களும் ஏனைய இனங்களோடு சமாதானமாகவே வாழவிரும்புகிறார்கள். ஒருகுழு செய்த வேலைக்காக எங்களைசந்தேகத்தோடு பார்க்காதீர்கள். மதத்தலைவர்களாகிய நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். அங்குள்ள ஜக்கியப்பட்டசெய்தி நாட்டிலுள்ள 2கோடி மக்களுக்கும் செல்லவேண்டும்என்றார்.
 
இறுதியில் ஊடவியலாளர்களின் கேள்விகளுக்கு மதத்தலைவர்கள் பதிலளித்தார்கள்.
 
ஊடகவியலாளர் கேள்வியெழுப்புகையில்:
கல்முனை உபபிரதேச செயலகம் அண்மைக்காலமாக இனவிரிசல்களை ஏற்படுத்திவந்ததே. இதனை சமயத்தலைவர்களாகிய நீங்கள் தலையிட்டு தீர்த்துவைக்கமுடியாதா? எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மௌலவி அஸ்வர் கல்முனைவாழ் தமிழ்மக்களுக்கான அந்த நிருவாக அலகு நிச்சயம் வழங்கப்படவேண்டும். அது அவர்களது நியாயமான உரிமை. எனவே அதனைவழங்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதேபோல் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிஅலகு தரப்படவேண்டும். என்றார்.
சேனாதிபதி ஆனந்த தேரரும் அண்iஅய தாக்குதல் தொடர்பாக பூரணவிளக்கமளித்தார். அரசியல்வாதிகள் பின்னணியிலிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டத்தவறவில்வை.கூடவே ஆட்சியாளர்கள் யாரும் இத்தாக்குதலுக்கு வகைகூறவில்வை என்றும் குற்றம்சாட்டினார்