தமிழர்களின் பிரதேசங்களே முஸ்லிம்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும்சிறந்த இடங்களாகும்.

யாழ் வெளியேற்றம் காத்தான்குடி படுகொலை பற்றி மட்டுமே கூவித் திரிந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் எதிர்மறை சிந்தனையாளர்களும் தங்களின் இலாப நோக்கத்தில் பயணத்த வேளை மக்களின் நலன்களைப்பற்றி சிந்திக்காது நடந்து கொண்டமையே இன்று இலங்கையில் இருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாழ்வையும் சிங்களவர்கள் சிதைக்க காரணமாக அமைகிறது …

தமிழர்கள் தங்களின் இருப்புக்கு மட்டுமே போராடுகிறார்கள் என்று பொய்களை பேசிப்பேசியே முஸ்லிம் மக்களை திசைதிருப்பிய முஸ்லிம் அரசியல்வாதி இப்போது நடந்தெறுகின்ற துப்பவியல் சம்பவத்தை கட்டுப்படுத்த ஒன்றினைந்து செயற்பாட வாய்ப்பிருந்தும் வெவ்வேறான பாதைகளிள் அடித்தளமிட்டு தங்களை மட்டும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றது இக்காலம்…

கலவரம் என்பதை தெளிவான முறையில் வித்திடுவது தனிமனிதர்கள் இல்லை மாறாக அதில் அரசின் பங்கும் போதிய அளவு இருக்கு என்பது கடந்த காலத்தில் நாம் அறிந்த உண்மை ஏனெனில் தமிழர்கள் மீதும் 1983 ல் இவ்வாறான கலவரத்தை கட்டவுழ்த்து விட்டு வேடிக்கை பார்த்ததும் இதே சிங்கள அரசு என்பதை தமிழர்கள் நாம் நினைவு படுத்த கடமைப்பட்ட ஆட்களாக இருகின்றோம் முஸ்லிம் மக்களின் நலன் கருதி.
அன்றைய கலவரத்தை புலிகள் மீது தூக்கிப்போட்ட சிங்கள தேசம் இப்போது நடந்தெறும் கலவரத்தை யார் மீது தூக்கிப்போட முனைகிறது என்பது இப்போதைய கேள்வியாக இருக்க…

இன்று நடந்தெறிக் கொண்டிருக்கும் அடக்குமுறையை போன்று முன்னைய நாட்களில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது பல கோணத்தில் திணிக்கவே அதை பார்த்துக்கொள்ள முடியாத ஒருவர் தங்களின் சுயநலத்திற்காக பிற சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய முனைந்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் அடக்குமுறையில் இருந்து தன் சமூகத்தை ஏதோவொரு வழிகளில் காப்பாத்த வேண்டுமென நினைக்கும் போது பல விடையங்கள் நடந்தெற சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினால் மட்டுமே தன் சமூகத்தை பாதுகாக்க முடியுமென காலநிலமை உரைக்க வே. பிரபாகரன் எனும் பெரும் சக்தி உருவானதை காலம் கண்முன்னே காட்டி நிற்கிறது ….

ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது தங்களின் ஆதிக்க அடக்குமுறையை கட்டவுழ்த்து விட பல காரணிகள் இருக்கிறது அதன் வெளிப்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ அதன் விளைவுகளும் பெரிதாக பார்க்கப்படுகிறது இந்த உலக நடப்பில் என்பதை நாம் பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் கூட சற்றும் பொருட்படுத்தாதிருந்து சுயநலம் வேண்டிய வாழும் முஸ்லிம் தலைமைகளும் எதிர்மறை சிந்தனையாளர்களுக்கும்…

தமிழ் தரப்புக்கள் கூறும் எந்த கருத்துக்களும் அறிவுரைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு கசப்பானதாகவே இருக்கு ஏனென்றால் அவர்களை வழிநடத்திய முஸ்லிம் தலைமைகள் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் எனும் விம்பநிலையை ஆரம்ப நாளில் இருந்தே விதைத்து விட்டார்கள் அதையே சுமர் 20+25. வருட காலம் தொட்டு முஸ்லிம் சமூகமும் நம்பி வாழ்கின்ற நிலையை பல சந்தர்ப்பம் வெளிப்படுத்தி இருந்தது….

அன்று எம்மை எதிரியாக பார்த்த முஸ்லிம் தலைமைகள் எவ்வாறு சிங்கள தேசம் எம்மை அழித்து சிதைக்க முற்பட்டதோ அதே போன்று முஸ்லிம் தலைமைகளும் சரிக்கு சமமாக செய்து முடித்தார்கள் என்பதும் தமிழ் சமூகம் முள்ளிவாய்க்காலில் அழிவின் உச்சத்தை அடைத்த நிலையிலும் சிங்களத்துடன் இனைந்து போர் வெற்றியை பால் சோற்றுடன் கொண்டாடியதை எஞ்சிய நாங்கள் பார்த்து கவலையடைந்தோம் என்பதும் உண்மை இன்று உங்களுக்கு எதிராக நடக்கும் இந்த துப்பவியல் சம்பவத்தைப் பார்த்து நாமும் கவலையடைகிறோம் என்பது முஸ்லிம் தலைமைகளுக்கு தெரியாது ஆனால் மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கு …..

ஆகையால் கடந்த கால கசப்பான நிலைமைகளை எடுத்துக்காட்ட முனையவில்லை சாதாரண நிலையில் உள்ள முஸ்லிம்கள் இதை அறிய வேண்டியே எழுதத் தோன்றியது அத்தோடு முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் மக்களும் ஒன்றை புரிந்து கொள்ளா வேண்டும் என்றும் தமிழர்களின் பிரதேசங்களே முஸ்லிம்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் சிறந்தென பல வழிகளிலும் உணர்த்தி விடுவதை கருத்தில் கொண்டு முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் ஒன்றினைந்து செயற்படுவதே இப்போதைய காலத்தின் தேவையாக உள்ளது…..

நன்றி

Moorththy Dinu