தேசியமட்ட விளையாட்டுக்கு கொல்லநுலை இளைஞர் கழகம் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட விளையாட்டுநிகழ்வுகளில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பிரதேசமட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற, கொல்லநுலை ஸ்ரீ விவேகானந்த இளைஞர்கழகம் இரு போட்டிகளில் வெற்றி பெற்று, தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கம் மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடத்தினைப்பெற்று தேசியமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன், பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும், வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தினை வந்தாறுமூலை கிருஸ்ணா விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டு தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.