மட்டக்களப்பு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 91 இலட்சம் நஸ்ட ஈடு.

சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் பயிர்ச்செய்கையில் படைபுழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கையினை  விவசாய,கால்நடை,கிராமியபொருளாதாரநடவடிக்கை ,கால்நடை அபிவிருத்தி, ,நீர்ப்பாசன,மற்றும் மீன்பிடிநீரியவள அபிவிருத்தி அமைச்சு  தற்போது ஆரம்பித்துள்ளது .

இந்நடவடிக்கைக்கமைய முதல் கட்டமாக இம்மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட சுமார் 477ஏக்கருக்குரிய     6 1 3 விவசாயிகளுக்குசுமார்  ஒரு கோடியே 91 இலட்சம்ரூபாவை நஷ்டஈடாக வழங்க விவசாய அமைச்சு மட்டக்களப்பு மாவட்ட விவசாய காப்புறுதி சபையின்அலுவலகத்துக்கு நிதி வழங்கியிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.

 இதற்கமைய இன்று( 1 3)வந்தாறுமூலை கமநல சேவைகள் பிரிவின் ஈரலக்குளம்,பெரியவட்டவான்,காகொம்மாதுரை,சித்தாண்டி,வந்தாறுமூலை பகுதிகளில் முதல் கட்டமாக முழுமையாக பாதிக்கப்பட்ட49  விவசாயிகளுக்கு 24 லட்சம்ரூபாவுக்கான நஸ்டஈடுகாசோலைகள் மாவட்ட விவசாய காப்புறுதி சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வழங்கிவைத்தார்.

வந்தாறுமூலை கமநல சேவைகள்நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்த நஷ்டஈடுகாசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.வீ.இக்பால்,மட்டக்களப்பு கமநலசெவைகள் உதவிப்பணிப்பாளர்,கே.ஜகன்நாத்,விவசாய பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராசா, மாவட்ட விவசாய காப்புறுதி சபையின்உதவிப்பணிப்பாளர்.எம்.பாஸ்கரன் வந்தாறுமூலை விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.எம்.வதுர்தீன்உட்பட பல விவசாய சேவை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இம்மாவட்டத்தில் 2018/2019 பெரும் போக பயிர்ச்செய்கையில்3437ஏக்கரில் சோளம் பயிர் செய்கை பண்ணப்பட்டிருந்ததுடன் அதில்  2005  ஏக்கர் சோளம் படைப்புளுவினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது இரண்டாம் கட்டத்தில் இம்மாவட்டத்தில் படை ப்புளுவினால் பாதிக்கப்பட்ட சகலவிவசாயிகளுக்கும்ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நஷ்ட ஈடு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது