வெடிபொருட்களை ஒப்படைக்க கால அவகாசம்

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்போர், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து, ஒப்படைப்பதற்கு 3 நாள் கால எல்லை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (11) காலை 6.00மணி முதல்  எதிர்வரும் 14ஆம் திகதி வரை இது குறித்து அறிவிக்க முடியும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த இடத்திற்கு சென்று அவ்வெடிபொருட்களை பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.