ஆரையம்பதி கண்ணகியம்மனின் “கண்ணகியின் புகழ்பாட வந்தோம்”

க. விஜயரெத்தினம்)
ஆரையம்பதி கண்ணகியம்மனின் “கண்ணகியின் புகழ்பாட வந்தோம்” ஆன்மீக இசை பேழைவெளியீட்டு நிகழ்வானது நாளை ஞாயிற்றுக்கிழமை (12.5.2019)காலை 10.30மணியளவில் ஆரையம்பதி இராமகிருஷ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கே.மகேந்திரலிங்கம்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு இறுவெட்டுக்களை வெளியீட்டு வைக்கவுள்ளனர்.இந்த இசைப்பேழை இறுவெட்டானது ஆரையம்பதியை சேர்ந்த சி.ரஞ்சித்குமாரின் தயாரிப்பிலும், ஆரையம்பதியை சேர்ந்த ராஜன் யோகநாதன், தர்மரெட்ணம் மற்றும் ச.ரகுதாஸ் ஆகியோரின் ஏற்பாட்டிலும் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.