சனாதிபதி கிழக்கு ஆளுநரை பாதுகாக்க முயற்சிக்கின்றாரா?

தமிழர்களைத் தண்டிப்பதிலேயே அரசாங்கம் எப்போதும் குறியாகவுள்ளது
இஸ்லாமிய பயங்கரவாதத்தை அரசு  உரம்போட்டு வளர்க்கிறதா?
காரைதீவில் ஊடகவியலாளர் மாநாட்டில் தவிசாளர் ஜெயசிறில் காட்டம்.
(காரைதீவு  நிருபர் சகா)

 
இந்த அரசாங்கம் தமிழ்மக்களைத் தண்டிப்பதில் மாத்திரமே எப்போதும் குறியாகவுள்ளது. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை உரம்போட்டு வளர்க்கிறதா என்ற சந்தேகம் எழுகின்றது. நடந்துமுடிந்த பயங்கரவாதகுண்டுத்தாக்குதல்களின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளை இன்னும் கைதுசெய்யாதது ஏன்?
 
இவ்வாறு நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் கேள்வி எழுப்பினர்.
குறித்த ஊடகவியலாளர் மாநாடு பிரதேசசபையின் நூலககேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
 
 
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும்  கூறுகையில்:
 
இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் மக்கள் பயபீதியுடனுள்ளனர். குறிப்பாக சுற்றவர 3 முஸ்லிம் ஊர்களுக்கு மத்தியிலுள்ள காரைதீவுக்கிராமமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  
 
கடற்கரைவீதியால் ஏராளமான மக்கள் செல்கிறார்கள். கஞ்சா செல்கிறது அபின் செல்கிறது. அதேவீதியில்தான் பொலிஸ் உபநிலையமுள்ளது. கடற்படை முகாமுள்ளது. ஆனால் இவற்றைச்சோதனை செய்வதேகிடையாது. 
இக்கிராமத்திற்கு உரிய பாதுகாப்பை இவர்கள் செய்யவில்லையென்றால் எதற்காக இங்கு குடிகொள்ளவேண்டும்?
 
ஆலயங்களுக்கும் கிராமத்திற்கும் பாதுகாப்புவழங்குமாறு என்னிடம் தர்மகர்த்தாக்கள்,அதிபர்கள்  பொதுபிரமுகர்கள் கேட்கிறார்கள். நான் பலதடவைகள் பொலிசாரிடம் கேட்டும் இன்னும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தேவாலயமுன்னால் நிறுத்தப்படும் கல் மண் ரிப்பர்களால் ஆபத்து என மக்கள் முறையிடுகின்றனர். இதனைசம்மாந்துறைப்பொலிசாரிடம் தெரிவித்தால் அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கிறார்களில்லை.
காரைதீவு தென் வட எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவேண்டும். காரைதீவின் பாதுகாப்பு தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டால் நாம் அஹிம்சைவழியில் மாற்றுஏற்பாடு செய்யவேண்டிநேரிடும்.
 
ஆளுக்கொரு சட்டமா?
 
விடுதலைப்புலிகள் பற்றி உச்சரித்ததற்கு இராஜாங்கஅமைச்சர் விஜயகலாவின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் இரத்தஆறு ஓடும். காளிகோவிலi இடித்து மீன்சந்தை கட்டினேன். நீதிபதியை இடம்மாற்றினேன் என்று தனது வாயால் வாக்குமூலம் கொடுத்த ஆளுநரை இன்னும் கைதுசெய்யாதது ஏன்?
 
மக்களால் நிராகரிக்கப்பட்ட அவரை ஆளுநராக்கிய ஜனாதிபதி இன்று அவரைப்பாதுகாக்க முற்படுகிறாரா? புலிகளின்போராட்டம் நியாயமானதென அவரே கூறுகின்றார்.மக்களென்றால் சமநீதி வழங்கப்படவேண்டும்.
விஜயகலாவிற்கு ஓரு சட்டம்? ஹிஸ்புல்லாவிற்கு இன்னொரு சட்டமா? இதுதானா நீதி?
 
 
கிழக்கில் அரசவிரோத இஸ்லாமியபல்கலைக்கழகமொன்று அவரால் பலவருடகாலமாக அனுமதியின்றிக் கட்டப்பட்டுவருகிறது. இதனை அரசாங்கம் கண்டுகொள்ளாதது ஏன்? பலகோடி ருபா பரிமாறப்பட்டிருக்கிறது.
 
இந்த விடயத்தை சக்தி ரிவி மாத்திரமே அம்பலமாக்கிக்கொண்டிருக்கிறது. ஏனைய ஊடகங்கள் இதனைக்காணாதது ஏன்? ஊடகதர்மம் பேணப்படவேண்டும்.
இஸ்லாமியப்பயங்கரவாதிகளி;ன் தளமாக இன்று கிழக்கு மாறியுள்ளது. ஆயுதங்கள் பிடிபடுவதும் கைதுசெய்யப்படுவதும் முஸ்லிம்களே. 
 
நிலைமைஇப்படியிருக்க பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் அல்ல என்று எப்படிச் சொல்வது? நான் இனவாதம் பேசவில்லை. நியாயம் ஒன்றிருக்கிறது. கொள்கையுடன் இயங்கிய புலிகள் பயங்கரவாதிகள்? கொள்கையின்றி மிலேச்சத்தனமான தாக்குதலைச்செய்த இஸ்லாமியப்பயங்கரவாதிகள் வெறும் குழுவினர்.
 
நீண்ட போராட்டத்தை இந்தநாட்டில் நடாத்தி பலதுன்பங்களை இழப்புகளை அனுபவித்தவர்கள் தமிழர்கள். அன்று தமிழர்கள் அனைவரும் நடாத்தப்பட்டவிதம் வேறு.மழையிலும் வெயிலிலும் சித்திரவதை சுற்றிவளைப்பென்றால் சாவா? வாழ்வா? என்ற நிலை. உயிரைக்கையிலெடுத்து அலைந்தனர் தமிழர்கள். இதனை அன்றும் செய்திருக்கவேண்டும். தமிழர்கள் அடிமாடுகள் போல் நடாத்தப்பட்டார்கள்.
 
ஆனால் இன்று மிககண்ணியமாக சுற்றிவளைப்பு கெடுபிடியின்றி நடக்கிறது. அதனையே மனிதசமுதாயம் விரும்புகிறது. வெறும் கத்தியையும் கோடரியையும் எடுத்து உலக நாடுகளுக்கு படம் காட்டுகிறார்களா?
இந்த நாட்டில் மூவினமக்களும் உண்மையான சுதந்திரத்துடன் இனநல்லிணக்கத்துடன் வாழவேண்டுமாகவிருந்தால் அரசியலை மையப்படுத்தாமல்  வாக்குகளை மையப்படுத்தாமல் நீதியாக நேர்மையாக இதயசுத்தியுடன் இப்பிரச்சினையை அணுகி தீர்வுகாணுங்கள். உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். என்றார்.