கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை 2019.05.10 பூரண ஹர்த்தால் அஸ்டிக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை நகரில் வியாபாரநிலையங்கள் மூடீக்காணப்பட்டது. வங்கிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. பாடசாலைகள் இயங்கவில்லை. தனியார் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.அரச போக்குவரத்துகளும் காலையில் இடம்பெற்றிருந்தது.
மூதூரில் இருந்த திருகோணமலை வந்த அரச போக்குவரத்து வண்டிக்கு ஆண்டான்குளம் பகுதியிலும், அங்கோட சாலைக்கு சொந்தமான வண்டிக்கு சர்தார பகுதியிலும் கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
குர்த்தால் காரணமாக திருகோணமலை நகர், மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளும் வெறிச்சொடிக் கிடப்பதனைக் காணமுடிகிறது.