மண்ணின் மைந்தன் டாக்டர் சுகுணனின் ஆதங்கம்.

#வைத்திய #நிபுணர்கள் #நியமனத்தில் #களுவாஞ்சிகுடி #ஆதார #வைத்தியசாலைக்கு #பாராபட்சம்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட வைத்திய நிபுணர்களுக்கான இடமாமாற்ற பட்டியலில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அம்போவென கைவிடப்பட்டு புறந்தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரியதும் கண்டனத்திற்குரியதும் உடனடியாக சீர்செய்யப்பட வேண்டியதுமானது. தனித்தமிழர்கள் வாழும் பட்டிருப்புத் தொகுதியின் ஒரேயொரு ஆதார வைத்தியசாலையான இதனை பல இடர்பாடுகளின் மத்தியில் சிலரின் துணையோடு அதல பாதாளத்திலிருந்து கடந்த சில வருடங்களாக உயிரைக்கொடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக ஆளணியிலும் சரி, கட்டுமானத்திலும் சரி சேவை வழங்கலிலும் சரி உயர்த்தி வந்துள்ளேன்.
நான் ஆரம்பிக்கையில் வெறும் மூன்று வைத்திய அதிகாரிகளுடன் ஆரம்பித்த வைத்தியசாலை இன்று மூன்று வைத்திய நிபுணர்களும் 25 வைத்திய அதிகாரிகளும் மூன்று பல்வைத்தியர்களுமாகவும் ஆளணியில் இரட்டிப்பாகி புதிதாக மாவட்டத்திலேயே முதலாவது கணக்காளரின் நியமனத்தை பெற்ற வைத்தியசாலை ஒன்றாக விளங்குகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளணி மீளாய்விலும் களுவாஞ்சிகுடிதான் அதிகமான ஆளணியை பெற்றுக்கொண்டது.
தமிழ் பிரதேசங்களில் பலவிடயங்கள் அதிகாரிகளின் முயற்சியால் முந்நகர முஸ்லிம் பிரதேசங்களில் அரசியல்வாதிகளால் குறிப்பாக அமைச்சர்களால் முந்நகர்த்தப்படுகிறது. எமது அரசியல்வாதிகள் இவ்வகையான விடயங்களில் அதிகாரிகளில் இருந்து அந்நியப்பட்டும் லாய்க்கற்றவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லாவும் வாழைச்சேனைக்கு அமீர் அலியும் ஏறாவூருக்கு மௌலானாவும் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு பைசல் காசிம் சுகாதார அமைச்சர் மூலம் அழுத்தம் கொடுத்து விசேட வைத்திய நிபுணர்களை நியமித்துள்ளார்கள். எங்களது கோரிக்கை அனைத்தும் குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளது.
A தர வைத்தியசாலையை விட்டு B தர வைத்தியசாலைகளுக்கு முற்றாக நிபுணர்களை நியமித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நான் இருக்கும்வரை ஓரளவு வைத்தியசாலையை முந்நோக்கி நகர்த்தியிருந்தேன் ஆனால் அது இனிமேல் நடக்கப்போவதில்லை. இனித்தான் அருமை சில எருமைகளுக்கும் விளங்கும்.
இப்பொழுதாவது களுவாஞ்சிகுடியான்களும் பட்டிருப்பு தொகுதியான்களும் ஒன்றுபட்டு உருப்படியான அரசியல்வாதிகள் ஓரிருவரையாவது பிடித்துக்கொண்டு அநீதிக்கு எதிராக புறப்படுங்கள். நான் அருகில் இல்லையே என்ற கவலைதான் எனக்கு.
நேரடியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினாவை நீதிகேட்டு சந்தியுங்கள்.
Share பண்ணுங்கள்
கவலையுடன்
Dr.G.Sukunan
Former MS
10.05.2019