மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடையின் போது 230 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடையின் போது 230 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் நெல் கொள்வனவின் போது வியாபாரி உரிய விலையில் நெல்லினை கொள்வனவு செய்வதில்லை.என்ற குறைபாட்டை தீர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் முயற்சியின் பெயரால் 50 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுத்து நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலையினையும் ஏற்படுத்தியமையால் இம்முறை விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.
இம்முறை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பெரும்போக நெல் கொள்வனவானது ஆறு களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடவசதியின்மையால் மேலுமு; மூன்று களஞ்சியசாலைகள் அரசடித்தீவு,போரதீவு,மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் மேலதிகமாக களஞ்சியசாலைகள் பெறப்பட்டது.
மட்டக்களப்பில்கயுவத்த,புலிபாய்ந்தகல்,முள்ளாமுனை,கரடியநாறு,தும்பங்கேணி,மற்றும் மணற்பிட்டி, என ஆறு களஞ்சியசாலைகள் வழமையான பயன்பாட்டில் அந்தந்த பிரதேச விவசாயிகளின் நலன்கருதி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.இதில் இம்முறை 230 மெற்றிக் தொன் நெல் இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வுவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் வை.வி.இக்பால்; குறிப்பிடுகையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெரும்போக நெற்களை பாதுகாப்பான முறையில்  களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றை அனுமதி கிடைத்ததும் பகிரங்க ஏலத்தில் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதைப்போன்று சிறுபோகத்திற்கான நெல்லினையும் விவசாயிகளிடம் இருந்து நியாய விலையில் அரசு கொள்வனவு செய்வதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கும் என பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.