தனியார் கத்தோலிக்க பாடசாலைகளை 14 இல் திறக்க ஏற்பாடு

இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக தனியார் கத்தோலிக்கப் பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதி திறக்க கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தீர்மானித்துள்ளதாக, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

சுமூக நிலை ஏற்படாத பட்சத்தில் வெசாக் விடுமுறை வரை இப்பாடசாலைகள் மூடப்படும் எனவும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் சூழ்நிலையை பொறுத்து எதிர்வரும்  ஞாயிறு முதல் தேவாலயங்களில் ஆராதனையை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.