கூரிய ஆயுதங்கள் தொடர்பான காணொளி, படங்களை வெளியிடத் தடை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும்சோதனை நடவடிக்கைகளின் போது, கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும் வாள்கள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள்  தொடர்பிலான காணொளிகள் மற்றும் படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதை இனிவரும் நாள்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தால் சகல ஊடகங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.