கிழக்கு ஆளுனர், அமைச்சர் றிசாட் பதிவூதீன் ஆகியோரை விசாரணை செய்வதன் மூலம் பல உண்மைகள் வெளிப்படும். – இரா.துரைரெட்ணம்

பயங்கரவாத அமைப்புடன், ஆளுனர் ஹிஸ்புல்லாஜ், வடக்கிலுள்ள அமைச்சர் றிசாட்; பதிவூதீன் ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்புள்ளதாக பத்திரிகை வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. இருவரையும் விசாரணைசெய்வதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும். என முன்னாள் கிழக்குமாகாணசபையின் சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழல் , கிழக்கு மாகாணம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 21.04.2019 அன்று தேசிய முஸ்லிம் தவ்ஹித் ஜமாத் (ஐ.ளு) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பின்னர், இலங்கையில் பெரியதொரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுமிடத்து முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடியவாறே குறித்த முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு திட்டங்களை தீட்டியிருப்பதற்கான விடயங்கள் புலனாகின்றது. குறிப்பாக இலங்கையில் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்படும் ஆயுதங்கள் சாட்சியங்களாக உள்ளன. பள்ளிவாசல் சூழலிலும், ஏனைய இடங்களிலும் கைப்பற்றப்படுகின்ற, ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப் பார்க்கும் போது பாரிய இனக்கலவரம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் ஏனைய சமூகத்தவர்களை அழிப்பதற்கான திட்டம் ஒன்று உள்ளதென்பதை சந்தேகிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் ஏனைய இனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவாறு முஸ்லிம் பயங்கரவாத அமைப்புடன் பலர் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறியக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, அரசியல் வாதிகளான ஆளுனர் ஹிஸ்புல்லாஜ், வடக்கிலுள்ள அமைச்சர் றிசாட்; பதிவூதீன் ஆகிய இரண்டு பேரும் தொடர்புள்ளதாக பத்திரிகை வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. இருவரையும் விசாரணைசெய்வதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும். ஆனால் ஒருவர் ஒருகட்சிக்கு பின்னாலும் மற்றொருவர் இன்னொரு கட்சிக்குப் பின்னாலும் நிற்பதன் காரணமாக விசாரிக்க முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய தனிப்பட்ட நலனுக்காக ஒரு சமூகத்தை காட்டி வியாபாரம் செய்திருக்கின்றார்கள்.

புனாணையிலுள்ள பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக் குழுவின் கீழ் கொண்டுவருவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்பாவி முஸ்லிம்களாகிய குறிப்பிட்ட பலர் எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலைமைக்கு பொறுப்பானவர்கள் குறிப்பிட்ட அரசியல் வாதிகளும், முஸ்லிம் பயங்கரவாத இயக்கமுமேயாகும். இச்செயற்பாடென்பது நீடிக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.

எனவே கடந்த நாற்பது வருடங்களாக துன்பத்தை அனுபவித்த தமிழர்களாகிய நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் குறிப்பாக, சமாதானத்துடனும் ,வன்முறையற்ற சூழலிலும், மனிதநேயத்துடனும் வாழ்வதற்காக தமிழ் பிரதேசங்களில் ஏதாவதொரு வன்முறை சார்ந்த செயற்பாடுகளை அடையாளம் கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும். இவைமட்டுமின்றி ஒரு தமிழ் பெண்ணை தவறாக நடத்தியது போல இன்னும் பலரை முயற்சிக்கக் கூடும். உங்கள் பகுதியில் பொதுச்சந்தைகளில், வர்த்தக நிலையங்களில், பொதுஇடங்களில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி ஆபத்தை விளைவிக்கக் கூடும். இது தொடர்பாகவும் விழிப்பாக இருப்பதோடு, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு கட்டங்களையோ, காணிகளையோ சொந்தமாகவோ, வாடகைக்கோ அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முயற்சிக்கக்கூடும். எனவே இந்த விடயம் தொடர்பாக தமிழர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவைமட்டுமின்றி கிழக்கு ஆளுனரின் கட்சி சார்பான செயற்பாடும், தமிழ் மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடிய சூழலும் உருவாகியுள்ளதால்
கட்சி சார்பில்லாத அதிகாரி, மூன்றின மக்களும் ஏற்றுக் கொண்ட அரசியல்கட்சி இல்லாத ஒருவரை ஆளுனராக கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனக்குறிப்பிட்டுள்ளார்.