ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் சனாதிபதி சாய்ந்தமருதில்

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்து லீ மெரிடியன் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்றார்.
இந் நிகழ்வின் போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.