வாழைச்சேனை பொலிஸ் ஆலோசனை சபையினால் இன நல்லுறவு கலந்துரையாடல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு ஆலோசனை சபையின் ஏற்பாட்டில் பாலைநகர், நாவலடி, காவத்தமுனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுடனான இன நல்லுறவை கட்டியெழுப்புவதற்கான சந்திப்பு ஒன்று மயிலங்கரச்சை பௌத்த விகாரையில் இன்று இடம் பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் ஆலோசனை சபையின் பொருளாளர் மௌலவி எஸ்.ஹாறூன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீ மகிந்தாராம, வாழைச்சேனை தேவ சபை பொறுப்பாளர் போதகர் கே.சுனில், மாங்கேணி சித்தி விநாயகர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ்.மகேந்திரராசா, மௌலவி எஸ்.முஸ்தபா, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான், பொலிஸ் ஆலோசனை சபையின் தலைவர் ஏ.எம்;.ஏ.காதர், செயலாளர் க.ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் ஆலோசனை சபையின் ஏற்பாட்டில் பொதுமக்களுடனான இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, வாழைச்சேனை தேவ சபை பொறுப்பாளர் போதகர் கே.சுனில், ஆலோசனை சபையின் பொருளாளர் மௌலவி எஸ்.ஹாறூன், செயலாளர் க.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இன நல்லுறவு சம்பந்தமான கருத்துக்களை வழங்கினார்கள்.

நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டுதாக்குதல் காரணமாக பல வாந்திகள் பரப்பட்டு வருகின்ற நிலையில் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள், சந்தேக நபர் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்களை கண்டால் உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.