மட்டக்களப்பில் உளநலமேம்பாட்டு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை.

(மட்டக்களப்பு சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டமற்றும்  குடும்பங்களிள் உளநலபாதிப்புக்குள்ளானவர்களுக்கு  தேவையான உளநல விருத்தி சேவைகளை வழங்க மாவட்ட உளநலஒன்றியம் செயல்படவுள்ளதுடன்  உளநல பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உளநல சேவைகளை வழங்க தேவையான உளநலமேம்பாட்டு  நிலையங்களை உருவாக்கவும் தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்கவும்  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் இன்று கூட்டப்பட்ட மாவட்ட உளநலஒன்றியத்தின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் சிறுவர், மகளிர் துஸ்பிரயோகம்மற்றும் சமூகபிரச்சினைகளுக்கு பிரிந்து தனித்தனியே செயல்படும் சகல உளநலசேவையாளர்களையும் ஒன்றிணைத்து இந்த மாவட்ட உளநல ஒன்றியம்செயல்படவேண்டுமென்று மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் அறிவுறுத்தல் விடுத்தார்.

எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் எதிர்நோக்கும் அனர்த்தங்கள்,சமூக பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உளநல ஆற்றுகை.மற்றும் வழிகாட்டுதல்கள்,தேவையான உளநல சிகிச்சைகளை தொடர்ந்தேர்ச்சி யாகபெற்றுக்கொடுக்கவும் துரிதமாக இயங்கக்கூடியவாறு சகல தரப்பு உளநலநிபுணத்துவம் கொண்ட சேவைகளை வழங்கும் வலுவான அமைப்பாக இந்த ஒன்றியம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்இங்கு குறிப்பிட்டார்.

 

மேலும் இம்மாவட்டத்தில் உளநல பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உளநல சேவைகளை வழங்க தேவையான உளநல மத்திய நிலையங்களை உருவாக்கவும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரச அதிபர் இங்கு தெரிவித்தார்,

மேலும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் நிலவும் அனர்த்த முகாமைத்துவ வைத்திய அதிகாரி பதவி விரைவாக நிறப்படவேண்டுமெனவும் இதனால் மேலதிக சேவை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாக இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்  மாவட்ட உளநல வைத்திய நிபுணர் .வைத்திய கலாநிதி கே.கடம்பநாதன்,உதவி மாவட்ட செயலாளர்.ஏ.நவேஸ்வரன்மாவட்ட தாய்சேய் வைத்திய நிபுணர்.எம்.அச்சுதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர்,ஏ.எம்.எஸ்.,.சியாட்மற்றும் உள நலசேவையின்வைத்திய அதிகாரிகள்,மற்றும் அரச சிறுவர்,மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்,பலரும் கலந்து கொண்டனர்.