கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளரிடம் காரைதீவு மாணவன் கேட்ட கேள்வி.

(காரைதீவு நிருபர் )
 
அண்மைக்காலமாக போதைவஸ்துத்தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பில் அதிகம் பேசிவந்தோம். ஆனால் இன்று பாதுகாப்புப் பற்றி அதிகம் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம்.
இவ்வாறு காரைதீவில் உரையாற்றிய கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரிக்கு திடீர் விஜயம்செய்த பணிப்பாளர் மன்சூர் மாணவருடனும் ஆசிரியர்களுடனும் பாதுகாப்பு மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
கல்லூரியின் விபுலாநந்தஅரங்கில் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் இந்த ஒன்றுகூடல் இன்று(6)நடைபெற்றது. 
நிகழ்வில் கல்முனை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பா.அ.சங்கச்செயலாளர் எம்.சிதம்பரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மாணவர் மத்தியில் உரையாற்றுகையில்:
நடந்துமுடிந்த துன்பியல்சம்பவம் முழுநாட்டையும் அசாதாரண நிலைமைக்குள்ளாகியிருக்கிறது. இன்று பாடசாலைகள் ஆரம்பமாகியபோதிலும் மாணவரின்வரவு வெகுவாகக்குறைந்துள்ளது. இன்னமும் மக்கள்மத்தியில் பயபீதி நீங்கவில்லை என்பதே அதன் அர்த்தம்.
 
பாதுகாப்புத் தொடர்பில் பலஅறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நாம் வாழந்து முடித்தவர்கள்.நீங்கள் வாழவேண்டியவர்கள். எதிர்றால சிற்பிகள். உங்கள் பாதுகாப்கை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
 
நாங்கள் செய்யாh எதனையும் செய்யப்போவதில்வை. எனவே நீங்கள் புதிய சிந்தனைகள் இருந்தால் சொல்லுங்கள்.முழ கிழக்கு மாகாணத்திற்கும் அறிமுகப்படுத்தலாம்.
 
எமது எதிர்பார்ப்பெல்லாம் உங்களைப்பாதுகாப்பதுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. என்றார்.
மாணவர்களும் தமது சிந்தனைகளைச் சொன்னார்கள். பாடசாலைவரும்போது சிலதனிமையான இடங்களில் பாதுகாப்புத்தேவை. வாயலில் இராணுவம் பாதுகாப்பிலீடுபடவேண்டும். இரவுநேர காவலாளிவேண்டும் என்று கூறினர். ஒருமாணவன் இன்னும் ஒருவாரத்திற்கு பாடசாலையை மூடினால் என்ன? என்றும் கேட்டான்.
 
ஆசிரியர் சார்பில் இரசாயனவியல் ஆசிரியை பதிலீடுஇன்றி இடமாற்றப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஆசிரியரின்தேவை சுட்டிக்காட்டப்பட்டது.
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உரையாற்றியதைத்தொடர்ந்து பிரதிஅதிபர் பா.சந்திரேஸ்வரன் நன்றியுரையாற்றினர்.