வாகரையிலும் வெடி பொருட்கள் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி தண்ணிப்பால பகுதியில் மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகரை மத்தி தண்ணிப்பால பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த வளவினுள் மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் கைப்பற்றப்பட்டதாக வாகரை புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
வாகரை மத்தி தண்ணிப்பால பகுதி மக்கள் வாகரை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம்  மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் கைப்பற்றப்பட்டது.
மேலும் மிதிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டதுடன், குறித்த பகுதியில் இன்னும் ஆயுதப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரனை இடம்பெறுவதாக வாகரை புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு பிரிவிற்கு மக்கள் பங்களிப்பு அதிகம் இடம்பெறுகின்றது.