ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்து வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்து வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் ஆதம்லெவ்வை காதர் என  தெரிவிக்கப்படுகின்றது.