துணை இராணுவக் குழுக்கள் அமைப்பது தொடர்பான விடயத்தை தாம் ஏற்கவில்லை.

துணை இராணுவக் குழுக்கள் அமைப்பது தொடர்பான விடயத்தை தாம் ஏற்கவில்லையென தெரிவித்தார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் .

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த துணை இராணுவக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்திகள் குறித்துக் கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

துணை இராணுவக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிந்தேன்.ஆனால் நாங்கள் யாரும் அப்படியான கோரிக்கைகள் வந்தால் உடன்பட மாட்டோம் .தமிழ் முஸ்லிம்கள் உறவு விரிசல் ஏற்பட இடமளிக்க முடியாது .யுத்த காலங்களில் எங்களுக்கெதிராக முஸ்லிம்களை பயன்படுத்தியது போல இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக எங்களை பயன்படுத்த நாங்கள் இடமளிக்கக் கூடாது.இப்படியான அழைப்பு வந்தால் அவற்றை ஏற்பதில்லையென நாங்கள் கட்சியின் கூட்டத்தில் பேசி முடிவெடுத்துள்ளோம்.

என்றார் கருணா அம்மான்

நன்றி

தமிழன் செய்திகள்