மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப் பார்த்த பகுதியில் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப் பார்த்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிரடிப்படையினர் பொவிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

சன நடமாட்டம் அற்ற குறித்த பகுதியில் சுற்றி தகரத்தினால் அடைக்கப்பட்ட வெற்றுக் காணி ஒன்றில் கடந்த 16 ம் திகதி இரவு 10 மணிக்கு டியோ ரக ஹொண்டா மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாதேரால் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து 18 ம் திகதி குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில்; மோட்டார் சைக்கிள் ஒன்று குண்டுவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்

இச் சம்பவத்தையடுத்து கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில்  இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து இந்த தற்கொலை குண்டு தாக்துலுடன் தொடர்புடையவர்கள்  இந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பரீட்சித்து பார்த்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து குண்டு தாக்குதலில் சேதமடைந்து பாகங்களாக இருந்த மோட்டார் சைக்கிளின் பாகங்களை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) பொலிசார் விசேட அதிரடிப் படையினர் அந்த பகுதியை சுற்றி தேடுதல் நடத்தியபோது அங்கு மோட்டார் சைக்கிள் மீது குண்டு பரீட்சித்து பார்த்த எஸ்லோன் பைப் ஒன்றை மீட்டுள்ளனர் .

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது,