சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

       காரைதீவு  நிருபர் சகா
  • வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய  வளாகத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
இன்று(4) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்றுஇ ரம்போ கோடாரிஇ மற்றும் வாள் ஒன்று பொலித்தீன் உறை ஒன்றில் இடப்பட்டு உரப்பை ஒன்றில் போடப்பட்டு காணப்பட்டது.
 
இதன் போது கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் வி.சுப்பிரமணியம் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு சோதனை மேற்கொண்டது.
 
இச்சோதனையின் போது உரப்பையில் காணப்பட்ட ரவைகூடு கோடரி வாள் என்பன மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
சம்மாந்துறையில் அண்மைக்காலமாக சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுவருவதைத்தொடர்ந்து யாராவது இப்பொதியை ஆலயவளாகத்துள் வீசியிருக்கலாமென நம்பப்படுகிறது.
இதேவேளை சம்மாந்துறைப்பகுதிக்குள் யாரிடமாவது ஆயுதங்களிருந்தால் அவற்றை இருநாட்களுள் பொலிசிடம் ஒப்படைக்குமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுவருகிறது.