முஸ்லிம்கள் நமது அயலவர்கள் அவர்களுக்கு உதவாவிட்டாலும் வேதனைப்படுத்தாதீர்கள்.

(PaiwsAsa முகப்புத்தகத்திலிருந்து)

கடந்த இரண்டு நாட்களுக்கான பதிவுகளைப் பார்த்ததன் பின், ஏதாவது எழுத வேண்டுமென்று எண்ணினேன்.ஆனால் ஒரு புள்ளிக்கப்பால் நகரவில்லை மனது.
ஆனால்,கிறீஸ்த்தவனென்கிற முறையில்
ஒன்றைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு
இருப்பதாக உணர்கிறேன்.

முஸ்லிம்கள் நம் அயலவர்கள். அவர்களும் மனிதர்கள்.அந்தஅயலவன் மனவேதனைப்
படும் வேளைகளில்அவனுக்கு உதவ மனமில்லாவிட்டாலும்,அவனைமனவேதனைப் படுத்தாதீர்கள். எவரையும் எந்த விதத்தி
லும் தண்டிக்கும் உரிமை எமக்கில்லை.

“உன் எதிரியை ஏழு தடவையல்ல ஏழாயிரம்
தடவையும் மன்னிக்கலாம்” என்றுதான்
யேசு எனக்குக் கற்பித்திருக்கிறார்.
(ஏழாயிரம் என்பது அந்தக் காலத்தில் ஒரு பெரியஎண்ணிக்கைபோலும்.இன்றென்றால் அது ஏழுகோடிபெறும்)
மன்னிப்பதற்கு எல்லையில்லை என்பதற்கு
இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்.

“பிதாவே, இவர்கள் இன்ன செய்வதென்று
அறியாமல் செய்கிறார்கள்.இவர்களை மன்
னியும்” என்று தன் மரணத் தறுவாயிலும்,
சிலுவையிலிருந்துகொண்டே தன் எதிரிக
ளுக்காக இறைவனை மன்றாடிய அந்த
இறைமகன் பெயரால் அனைவரையும்
மன்னித்து ஏற்றுக்கொள்வோம். நன்றி