தற்போதைய சூழ்நிலையில் அருகில் இருப்பவர்களிடமும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஞா.ஸ்ரீநேஷன்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீவிரவாத தாக்குதல்களால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பதற்றத்துடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சூழ் நிலை காரணமாக அருகில் இருப்பவர்களிடமும் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

என மண்முனை மேற்கு வவுணதீவு கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழக மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.ஞா.ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன் நிகழ்வில் மண்முனை மேற்கு பிதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராசா, பிரதி தவிசாளர்,விளையாட்டு உத்தியோகஸ்தர்,தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்,விளையாட்டு கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பார்வையாளர் அரங்கானது கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் ரூபாய் பத்து இலட்சம் செலவில் நிர்மானிக்கப்பட இருக்கின்றது.

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த வருடம் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பேசியமைக்காக அனைவரும் கொந்தளித்து அவைரை வதவியிலிருந்து இறக்கினார்கள்.

ஆனால் தற்போதுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாக பல ஊடகங்கள் வாயிலாக கூறப்படுகின்றது. எனவே அவரை பதவியிலிருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.