சஹ்ரான் ஹாஷிம் மரணம் அடைந்து விட்டாரா?

புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் அது சார்ந்த அதிகாரிகள்,
NTJ உறுப்பினரும் தற்கொலை
தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவனுமான  சஹ்ரான் ஹாஷிம்  இன் மரணத்தில் ( மரணம் அடைந்து விட்டதா / இல்லையா)  என  சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
https://dailynews.lk/2019/05/04/local/184616/suspicion-over-zahran’s-death

தாக்குதல்தாரி சஹ்ரான் தாக்குதலுக்கு வந்து இருக்கலாம் ஆனால் வெடிகுண்டை பொருத்தி ரிமோட் மூலம் வெடிக்க வைத்துவிட்டு சஹ்ரான் தப்பி இருக்கலாம் என்பதாகவே  புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சந்தேகம் உள்ளது.

காட்சிகளின் படி வெடிகுண்டு வெடிக்கும் நபருக்கும் சஹ்ரானின் உருவத்துக்கும் வித்தியாசம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் அதேவேளை இது தொடர்பான DNA சோதனை இடம்பெற்றும் வருகிறது.

ஒரு தற்கொலை  இயக்கத்தின் தலைமை தாங்கி நடத்துபவர் முதலில் தற்கொலை செய்து இறப்பது சாத்தியம் இல்லாத ஒரு விடயம் என்பதால் தான் இந்த விடயத்தில் தாம் இன்னும் சந்தேகம் கொள்வதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.(MN)