பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்தை பார்வையிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களையும் பிரதமர் சந்தித்தார்.

தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை சேகரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்கும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிகாட்டினார்.

B37A0074

 

B37A0144

 

 

B37A0152