கிழக்கு மாகாண பாதுகாப்பு சம்பந்தமான சந்திப்பு.

கதிரவன் திருகோணமலை
கிழக்கு மாகாண பாதுகாப்பு சம்பந்தமான  கிழக்கு மாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை  03.05.2019 காலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முப்படைத்தளபதிகள், சர்வமதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

சந்தேகத்திற்கிடமாக யாரேனும் ஆலயங்களுக்குள் பிரவேசித்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் யாரேனும் சந்தேகிக்கும் வகையில் நடமாடினால் உடனடியாக தங்கள் தங்கள் பள்ளித் தலைவர்களிடம் தெரியப்படுத்துமாறும்,  வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பொரதுமக்களுக்கு இதனை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.