சர்ஹானின் தங்கை 20இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது

தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியுமான முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமைக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதியகாத்தான்குடி,கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா – (25வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் வீட்டில் இருந்து 20இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமட் சர்ஹான் ஹாசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடைபெற்ற மோதில் கொல்லப்பட்டிருந்த ஒரு சகோதரி காத்தான்குடியில் இருந்துவந்த நிலையில் இன்று வீட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.