அட்டாளைச்சேனையில் வெடிபொருட்களை படையினர் மீட்டனர்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (01) காலை உள்ளுரில் தயாரிக்கப்பட்டவெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 6 குழாய்கள் விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டு அவைகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

குறித்த பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் நாளாந்தம் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் வழமை போன்று இன்றும் கடற்றொழிலுக்காக சென்றபோது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 6 குழாய்கள் மற்றும் அதனுடன் சில பொருட்களையும் கண்டுள்ளதனையடுத்து கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடற்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்படி விடயத்தை உறுதிப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர், குண்டு செயலிழக்கும் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுஅவற்றைச் செயலிழக்கச் செய்தனர்.
குறித்த பிரதேசம் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு மக்களை குறித்த இடத்துக்குச் செல்லவிடாது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
  1. நன்றி :ரீ.கே.றஹ்மத்துல்லா (மெட்ரோ)