குற்றம் செய்யாத எனது கணவரை இனியும் விடுவிக்காவிட்டால் தீவிரவாதிகளைப்போல் நானும் உயிரை மாய்த்துக் கொள்ள தயார்.

 

வவுணதீவு பொலிஸார் கொலையில் கைதுசெய்யப்பட்ட தனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மனைவி இராசகுமாரன் செல்வராணி வேண்டுகோள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து மாதமாகிவிட்டது. இதுவரைக்கும் அவரை சந்தேக நபராகத்தான் வைத்துள்ளார்கள். அவரைப்பார்க்கும்போது மூன்று மாதத்தில் விடுவதாக சொன்னார்கள். திரும்ப கொழும்பில் பார்க்கப்போகும் போது திரும்ப மூன்று மாதம் என்று சொன்னார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்வம் உறுதிமொழியாக நாங்கள்தான் அதனை செய்துள்ளோம் என்றும், இரண்டு பேரினுடைய ஆயுதங்களையும் நாங்கள் கைப்பற்றி கொண்டோம். வேன்லதான் வந்து கொலை செய்தோம் என்றும் வேன் ட்ரைவர் கூட உறுதிப்படுத்தி சொல்லியுள்ளார். அதை அறிந்தும் இதுரைக்கும் ஐனாதிபதியோ, அமைப்புக்களோ எங்கள் கணவரை விடுதலை செய்வதற்கு முன்வரவில்லை. என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் வவுணதீவு பொலிஸார் மீதான கொலையில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு காரணமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கதிர்காமதம்பி இராசகுமாரன் என்கின்ற அஜந்தனுடைய மனைவி இராசகுமாரன் செல்வராணி மட்டக்களப்பில் இன்று 30.04.2019 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஐந்து பிள்ளையும் நானும் ஐந்து மாதங்களாக படும்  கஸ்டம் எங்களுக்குத் தான் தெரியும். உண்ணாவிரதமும் செய்தோம். அதற்கும் விடுதலை செய்வோம் என்று இல்லை. அவர் போகும் போது மோட்டர்பைக்கில் போனார். சிஐடி சொல்லியுள்ளது அவரை நாங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போயுள்ளோம் என்று. இன்றுடன் ஐந்து மாதங்களாக மோட்டர்பைக்கில் வவுணதீவு பொலிசாரிடம் உள்ளது. நாங்கள் கேட்கும் போது அவரை றிலீஸ் பண்ணும் போது தருவோம் என்றார்கள். இதுவரைக்கும் மோட்டர்பைக்கை தரவில்லை.
மூத்தமகன் க.பொ.த உயர்தரம் படிக்கின்றார். அவர் சைக்கிளில்தான் கிளாசுக்குப் போவார். எங்களுக்கு கஸ்டம். மற்ற மகள் கொலசிப் அவக்கு பத்து வயது, மற்றவர் மூன்றாம் ஆம் தரம் படிக்கிறார். ஐந்துபிள்ளையும் நானும் மிகவும் கஸ்டம். எங்ட சொந்த பந்தம் எத்தின நாளைக்கு எங்களுக்கு சாப்பாடு தருவாங்க. இனிமேல் பட்ட கஸ்டம் நாங்க படமாட்டோம்.உண்ணாவிரதம் இருந்தும்  அவங்க நம்பல்ல. அவங்க கேட்டாங்க உங்கட கணவர் செய்யல்லண்டு எப்படியம்மா சொல்வீங்க என்று. எங்கட 16 வயது மகனைக் கொண்டு விசாரித்தாங்க. 45, 50 பேர் பொலிஸ் படைவந்து சோதனை செய்தார்கள். வீட்டுகாவலுக்கு கூட ஒரு பெண் பொலிஸ் கூட இல்லாமல் போயிட்டு.; இவரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளோம். இவரை விசாரித்து விட்டு விடுவதாக சொன்னார்கள். இன்டைக்கு கூட விடுதலை செய்வதாக இல்லை. விடுதலை செய்யப்பட வேணும் விடுதலை செய்யாவிட்டால்  IS தீவிரவாதிகள் தாக்குதல் செய்தது போல் எதையாவது குடிச்சோ, செய்தோ சாகுவதற்கு ரெடியாக இருக்கம். ஐந்து மாதம் கஸ்டப்பட்டோம். எனக்கு ஒப்பரேசனுக்கு கொஸ்பிரல்ல ஏத்திக்கொண்டு விட்டுத்து வந்து இரவு 8.14 மணிக்கு படுத்த கணவரை வாங்க எண்டு கூட்டித்துபோயும் நாங்கள் சொன்ன கதையை நம்பாமல் அன்று இரவு வெள்ளிக்கிழமை சாப்பிட்ட சாப்பாட்டோடு ஞாயிற்றுக்கிழை வரை ரீ கூட வைத்துக் குடிப்பதற்று பொலிஸார் விடவில்லை.; குளிசை போடுவதற்கு, குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு கூட விடவில்லை. இரவும் பகலுமாக சோதனைச்சாவடி போட்டு இருந்தவர்கள். மோட்டர்பைக்கில் லீசிங் காசு கட்டல்ல. அவங்க கட்டுங்க கட்டுங்க என்கிறாங்க.

லோன் எடுத்திருக்கம் 250000 ரூபாய். ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லை. எங்கட பிள்ளைகள் இன்றும் அப்பா எங்கம்மா என்றுதான் கேட்கும். காலையில் வரும் போதும் அப்பாவையா கூட்டிவரப் போறீங்கள் என்று கேட்காங்க. குற்றம் செய்யாத கணவரை கொண்டு வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு கடவுள் தண்டணை கொடுப்பார்.

ஒரு நேரம் சாப்பிட்டு அடுத்த நேரம் சாப்பிட வழியில்லாமல் கடன் வேண்டும் போது இதை தருவீர்களா என்று கேட்கும் நிலை. கடையில் கடன் கேட்டாலும் நம்புகின்றார்கள் இல்லை. ஐந்து மாதத்திற்கு தந்த நாங்கள் இன்னும் எப்படித் தருவது என்கிறார்கள். என்றார் அவர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் தெரிவிக்கையில், “தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பல குற்றவாளிகளை இலங்கை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதையிட்டு நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். அத்தோடு இன்னும் மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மனசில் இந்த துயர சம்பவம் அகலாமல் மக்களுடைய மனதில் மிகுந்த சோகங்களுக்கு மத்தியில் தான் இந்த பகுதி மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். எனவே இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதற்கான எமது மக்களாகிய நாம் எங்கனுடைய ஒத்துழைப்பை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க தயாராகவுள்ளோம் என்ற விடயத்தை கூறிக்கொள்வதோடு இந்த தீவிரவாதிகளின் இலக்கு பெருமளவில் தமிழ் மக்களை இலக்கு வைத்ததாகவே இந்த தாக்குதல் மூலம் நாங்கள் உணர்கின்றோம்.

தமிழ் மக்களுடைய அவலம் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்றது என நாங்கள் எதிர்பார்த்திருந்த வேளை மீண்டும் தமிழ் மக்கள் மீதான கொலை சம்பவங்கள் கொடுர சம்பவங்கள் இடம் பெறுவதை நாங்கள் கண்டிக்கும் இதே வேளை இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் நாங்கள் விரயமாக கேட்டும் அதே வேளை எங்களுடைய அமைப்பை சேர்ந்த கதிர்காமதம்பி இராசகுமாரன் என்கின்ற அஜந்தன் கடந்த 29.11.2018 ஆம் ஆண்டு வவுணதீவு பிரதேசத்தில் நடைப்பெற்ற பொலிசாரின் கொலை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு இன்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் அவரை தடுத்து வைத்துருப்பதை நாங்கள் நாம் அறிவோம். இன்று கொலை சம்பவத்தை புரிந்தவர்கள் ஐளு தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகள் என்பது தாமே இந்தக் கொலையை செய்ததாகவும் எற்றுக்கொண்டு வாக்குமூலம் அளித்திருப்பதையும் வெர்களால் பொலிஸாரிடமிருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஆயுதங்களை மீண்டும் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருப்பதாகவும் தங்களுடைய அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ளார்கள். எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள அஐந்தன் என்பவர் இந்தக் கொலையுடன் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது உணர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று வரையும் இவரை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்தவொரு அறிவித்தலையும் அரசாங்கம் விடவில்லை. தொடர்ந்து இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரைக் கைதுசெய்ததன் நோக்கம் இங்கே வவுணதீவில்பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான். ஆனால் அற்த சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் இவருடைய விடுதலை சம்பந்தமாக இதுவரையிலும் அவரது குடும்பத்தாருக்கு எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். எனவே அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவருடை விடுதலை சம்பந்தமாக விடயத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஐந்து மாதத்தில் அவருடைய குடும்ப நிலை மோசமான நிலையில் இருந்ததை எங்கள் கண்மூடாகப் பார்த்திருக்கின்றோம். பிள்ளைகளுடைய படிப்பு, நாளாந்த செலவுகள், உணவுக்காக கஸ்டப்படுகின்றார்கள். எம்முடைய அரசியல் வாதிகள் அவர்ளுடைய வலியில் பங்கெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். இவரைப்போலவே பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசாங்கம், சர்வதேசம் இணைந்து தீர்க்கமான முடிவை எடுத்து அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்.

அதேபோல் 10 வருடங்களுக் மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புக்கள், பெற்றோர்கள் அவர்களுடைய வலிகளை வீதிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தெரிவித்தவண்ணம் உள்ளார்கள். எனினும் இவர்கள் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 10 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய போரட்டத்திற்கான தீர்வை யாருமே பெற்றுக் கொடுக்காத நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்கிறது. எனவே இவர்களுடைய போராட்டத்திற்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பது எங்களுடைய ஒரு எதிர்பார்ப்பு. இந்த மூன்று விடயங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.
எம்முடைய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்து அடுத்து மாதங்களில் எங்களுடைய இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில் தீவிரவாத செயற்பாடுகள் நடக்கக் கூடிய சூழ்நிலை இருக்கும் என்பதால் பாதுகாப்பு தரப்பினரே உங்களை அவதானமாக இருக்கச்சொல்லிருக்கிறார்கள். ஆகவே மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளல் வேண்டும். என்றார் அவர்.

நன்றி

Voiceof media