சுவிஸில் உண்மைகள் பிடிவாதமானவை நூல் அறிமுக விழாவும் ,மாமனிதர் சிவராமின் நினைவு தினமும்.

ஊடகவியலாளர்; சண் தவராஜாவின் உண்மைகள் பிடீவாதமானவை நூல் அறிமுகநிகழ்வும்,  மாமனிதர் தராகி சிவராமின் நினைவஞ்சலி நிகழ்வும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சுரேஷ் செல்வரெத்தினம் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
தூ.வேதநாயகம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் நாட்டில் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களுக்கு  அஞ்சலி நிகழ்த்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நூல் அறிமுகவுரையினை எழுத்தாளர் நயினை சிறி அவர்களும்,நூல் வெளியீட்டுரையினை ஆசிரிய ஆலோசகர் க.அருந்தவதாஜா அவர்களும் நிகழ்த்தினர்.

சுpறப்புரையினை இயற்கை மருத்துவர் மீரா அவர்கள் நிகழ்த்தியதுடன், முதற்பிரதியினை கிருஸ்ணா அம்பணவாணர் பெற்றுக்கொண்டார்.
சுpறப்பு நிகழ்வாக ஊடகவியலாளர்கள் க.அமரதாஸ், அன்சீர், கனகரவி, கிருஸ்ணா அம்பணவாணர் ஆகியோர்கள் பங்குபற்றிய இன்றைய ஊடக உலகு எனும் தலைப்பில்  பேச்சரங்கம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.