“நாட்டுக்காக ஒன்றுபடுவோம்”கிராம சக்தி வேலைத்திட்டம் அடுத்த மாதம் அம்பாறையில் நடாத்தத்திட்டம்.

(ஊடகப்பிரிவு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள மாவட்டரீதியான கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கமைய மூன்றாவது தேசிய வேலைத்திட்டம் மே மாதம் 5ம் திகதி முதல் 11ம் திகதி வரை அம்பாறை மாவட்ட செயலகப்பிரிவில் நடாத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட செயலகப்பிரிவில் காணப்படும் 20 பிரதேச செயலகங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பொது மக்கள் இலகுவாக பயணடையும் வகையில் இவ் வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜய விக்ரம ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் சந்திர ரத்ன பல்லேகம தலைமையிலான குழுவினர் அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படைகளின் பொறுப்பாளர்கள் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.