புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (29) பெற்றுக்கொண்டுள்ளார்