50விகாரைகளில் தற்கொலை தாக்குதல் – ஞானசாரதேரர் எச்சரிக்கை

வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் வெசாக்தினத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம்.

50 பௌத்த விகாரைகளுக்கு வெசக் தினத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவே உற்சவங்கள் நடத்தப்படக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.