முஸ்லிம் மாணவிகளும் முகத்தை மூடக்கூடாது – அஸாத் சாலி

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவிகள் முகத்தை மூடும்வகையில் சீருடையில் வருதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கான சுற்று நிறுபத்தை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதற்காக இன்று 29 ஆம் திகதி 2மணிக்கு மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பாடசாலை அதிபர்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம் என்றார்.