24 மணித்தியாளங்களில் 48 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளங்களில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சந்தேகத்தின் பேரின் இவர்கள் கைது செய்யப்படடுள்ளனர். இவர்களிடமிருந்து ஆயுதங்கள், டெட்டனேடட்ர்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் அசிம்மின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந்த இரண்டு தினங்களாக கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த மக்களில் சஹ்ரானின் மனைவியும் பிள்ளையும் இருந்தமை தெரியவந்துள்ளது. இவர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, சஹ்ரான் ஹசிம்மின் சாரதியான மொஹமட் ஷெரிப் ஆதம் லெப்பே எனும் கபுர் எனும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.